Be income
Secure
போதுமான வருமானம்
“குந்தித் தின்றால் குன்றும் மாளும்”- என்பது பழமொழி. உழைப்பின்றி செலவு செய்தால்,
மலை அளவு செல்வம் இருந்தாலும் அழிந்துவிடும்
என்றுப் பொருள். அக்காலத்தில் உழைப்பு
என்பது பெரும்பாலும் உடல் உழைப்பு தான்.
பிறகு மதி (மனம்) உழைப்பும் அல்லது புத்தியின் உதவியுடன் உழைப்பதுதான் உடல்
உழைப்பை விட சிறந்தது. ஆனால் இக்காலத்தில் பணத்தின் உழைப்பு அதாவது நிதி முலதன
வளம் ;(Financial Capital
Resource) தான் இப்போதைய மனித வளத்தை விடவும்
மிக சிறந்த வளமாக கருதப்படுகின்றது. வருமானமில்லாத அல்லது பயன்தராத உழைப்பு
என்றும் வீண்தான். ஒருவன் தினமும் கடின
உழைப்பை மட்டும் கொடுத்து அதறற்கு தக்க வருமானமில்லை என்றால் அவரை அடிமை என்று
சொல்வார்கள். இக்காலத்திலும் மக்கள் பலர்
கடினமாக உழைக்கின்றனர். ஆனலும் அதற்குதக்க
வருமானமில்லை.
வருமானம் மிக முக்கியமான ஒன்று, நீங்கள் பணக்காரனாக இருக்கலாம் ஆனால் தொடர்ந்து உங்கள் செலவுக்கான
வருமானமில்லை என்றால் நீங்கள் ஏழையாவது உறுதி, பலர் ஏழையானதும் இப்படித்தான்.
வருமானம் என்றதும் நமக்கு நினைவுக்கு வருவது ஒரு வேலைதான். நம்மில் பலருக்கு தெரிந்தது அது மட்டும்தான். நல்ல வேலையாக இருந்தால்
மிக்க நல்லது, அப்படி இல்லை
என்றால் வருமானம் எவ்வளவு பிரமாதமாக இருந்தாலும் பயனில்லை. ஆறு இலக்க எண் வருமானத்தில் வேலை செய்து
மாரடைப்பு வந்தவர்களும். உயிரை
விட்டவர்களும் இங்கு உண்டு. அதேபோல் பலருக்கும் வருமானம் பற்றிய அக்கறையிம் இல்லை, வருமானத்தை உயர்த்துவது எப்படி என்ற
சிந்தனையும் இல்லை. வேலையில் இருப்பவர்களை
பொறுத்தவரை பதவி உயர்வு அல்லது ஆண்டு இறுதி ஊதிய உயர்வு மட்டுமே தங்களின் வருமான
உயர்வு என்றும், தொழில் அல்லது
வியாபாரத்தில் ஈடுபடும் பலர் வரும்போது வரும் என்ற அலட்சியத்திலும் உள்ளனர், இன்னும் சிலரோ தங்கள் தொழில் அல்லது வியாபாரம் உண்மையிலேயே
லாபத்தில்தான் உள்ளதா என்ற கணக்கோ உணர்வோ இல்லாமல் பிழைத்துக் கொண்டுள்ளனர் .
இவ்வாறு நீங்கள் ஓர்
வேலையிலோ அல்லது தொழிலிலோ ஈடு;பட்டு வரும் வருமானத்திற்கு சம்பாதித்த வருமானம் (Earned Income) எனப்படும். ஆனால்
சம்பாதித்த வருமானம் மட்டும் வைத்திருப்பது நிதி சுதந்திரமாகாது. நீங்கள் சம்பாதித்த பணத்தையோ அல்லது உங்கள்
அறிவு, திறமையைக் கொண்டோ நீங்கள் இன்னும் இரு வகையான வருமானத்தை அதாவது முதலீட்டு
வருமானம் (Investment Income)
மற்றும் செயலற்ற வருமானத்தை (Passive Income)
ஏற்படுத்த வேண்டும். இவ்விரு வகையான வருமானமே
நிதி சுதந்திரத்தை கொடுக்கும். சுதந்திரம் இல்லாமல் வரும் அதிக அளவு வருமானம்
முக்கியமில்லை. சுதந்திரமாக உங்கள் செலவுக்கு அதிகமாக வருமானம் வந்தால் போதுமானது
இதையே போதுமான வருமானம் என்று குறிப்பிடுகின்றோம். போதுமான வருமானம் என்பது
ஒருவருக்கு ஒருவர் மாறுப்படும்.
வருமானத்தை அதிகரிக்கவும் அதே சமையத்தில் வரவறிந்து வாழ்வதுமே
சிறந்தது. குசேலரைப் பார்த்து கண்ண பகவான் கேட்ட கேள்வி “உங்கள் மனைவி உங்கள் வரவறிந்து செலவிடுகின்றார்களா?” என்றுதான், நீங்கள் குசேலராகாமல் இருப்பதற்கும் வழி அதுதான். நீங்கள் எவ்வளவு
சம்பளம் வாங்கினாலும் செலவில் கட்டுப்பாட்டுடன்; இருங்கள். இதனை வள்ளுவர் பெருந்தகை வருமானம் அளவில் சிறியதாக இருந்தாலும்
செலவு அதிகமாகாமல் இருந்தால் கெடுதல் இல்லை என்றார்.
“ஆகுஆறு அளவுஇட்டிது ஆயினும் கேடில்லை
போகுஆறு அகலாக்
கடை”
ஆனால் இப்போது மக்கள் எல்லோரும் தங்கள் நிதி நிலையை தாண்டி தங்கள்
நிலையை மற்றவருக்கு காட்டத்தான் முனைகின்றனர். இதனை மருத்துவ செலவு, கல்யாண செலவு,
கல்வி செலவு என எல்லாவற்றிலும் தங்கள் நிலைக்கு
சற்று அதிகமாகவே செய்யவும் அல்லது போட்டிப்போடவும்தான் முனைப்பாக உள்ளனர். இது தவறு, மேலும் இது நம்மை பிரச்சனைகளுக்கே இட்டுச்செல்லும். வரவறிந்து செலவு
செய்வதும், முதலீட்டை தொடர்வதும் தான் நல்லது.
நிதி சுதந்திரத்திற்கு என்று மட்டுமில்லாமல் பொதுவாகவே ஒரே ஒரு
வேலையை மட்டும் சார்ந்து இருப்பது ஆபத்தானது நாம் சார்ந்து இருக்கும் வேலை ஒரு
நாள் இல்லாமல் போவதற்கும் அல்லது நாம் செல்ல முடியாத நிலை ஏற்படுவதற்கும் இங்கு
வாய்ப்பு அதிகம். பல சாம்ராஜ்யங்களே சாய்ந்த இந்த உலகத்தில் மாற்றம் ஒன்றே
மாறாதது. எந்த ஒரு சூழ்நிலையும் இங்கு நிரத்தரம் இல்லை. அதனால்தான் வாரன் பஃபெட் (Warren Buffett) அவர்கள் “ஒரு வருமானத்தை மட்டும் சார்ந்து இருக்க வேண்டாம் முதலீடு செய்து
மற்றொரு வருமானத்தை எற்படுத்திக்கொள்” என்றார்.
ஒரே ஒரு வேலையை சார்ந்து இருப்பது ஓர் முட்டாள்தனமான முடிவும்தான், உங்கள் உழைப்பு, அறிவு, திறமை, நேரம் மற்றும் ஆற்றல் என
எல்லாவற்றையும் ஒரு வேலைக்கு செலவிட்டு அந்த வேலை தரும் பணத்தை மட்டுமே நம்பி வாழ
வேண்டாம். இங்கு பலருக்கு தாங்கள் திறன்
அல்லது ஆற்றலை பயன்படுத்தும் வாய்ப்பே அந்த வேலையில் கிடைப்பதில்லை. மேலும் பலர்
தான் சார்ந்து இருக்கும் வேலைக்காக தங்கள் விலைமதிப்பற்ற சுதந்திரம், ஆரோக்கியத்தையும், உறவுகளையும் தியாகம் செய்கின்றனர். ஆகவே ஒரே ஒர் வருமானத்திற்கு
உங்களிடம் உள்ள எல்லாவற்றையும் இழக்காமல் சம்பாதித்த பணத்தையோ அல்லது திறமையையோ
அல்லது அறிவையோ முதலீடு செய்து மற்றுமொரு வருமானத்தை ஏற்படுத்துங்கள்.
வருமானம் அனைத்தும் செலவு செய்வதர்காக மட்டும்
இல்லை. மாதம் பதிமூன்றாயிரம் சம்பாதிப்பவரும் வாழ்கின்றனர், மூன்று இலட்சம் சம்பாதிப்பவரும் வாழ்கின்றனர். உங்கள் மகிழ்ச்சியான
மற்றும் சுதந்திரமான வாழ்க்கைக்கு எவ்வளவு பணம் வேண்டுமோ அதற்கு தக்கவாறு முதலீடு
அல்லது செயலற்ற வருமானத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். உங்களிடம் திறமை இல்லாமல்
இருக்கலாம், உங்கள் நேரத்தை முதலீடு செய்து திறமையை வளர்த்துக்கொள்ளுங்கள்.
பிறகு திறமையைக் கொண்டு வருமானத்தை பெருக்குங்கள். இதைதான் “இளம்வயதில் சம்பாதிப்பதற்கு நேரம்
செலவிடுவதைவிட கற்றுக்கொள்ள நேரத்தை செலவிடுங்கள்” என்கின்றார் ராபர்ட் கியோசகி (Robert Kiyosaki).
முதலில் உங்களிடம் பணம், இல்லாமல் இருக்கலாம் அதற்காக நீங்கள்
வேலைக்கு செல்லலாம். அத்தோடு நிற்காமல் “நீங்கள் சம்பாதித்த பணத்தை உங்களுக்காக மிக கடினமாக உழைக்க வையுங்கள்.
அப்போதுதான் அதற்காக நீங்கள் உழைக்க வேண்டிய அவசியம் இருக்காது” என்கின்றார் நெப்போலியன் ஹில் (Napoleon Hill)… (தொடரும்).


No comments:
Post a Comment